சிவகங்கையில் தன்னார்வலர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மனு

சிவகங்கையில் தன்னார்வலர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களை பணியமர்த்த கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை மீண்டும் பணியமர்த்த கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர். கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 3 ஆண்டிற்கு முன் பள்ளி குழந்தைகள், வாசிப்பு திறனை மறவாமல் இருக்க, இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

இத்திட்டத்தில் மாணவர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் மையத்தை ஏற்படுத்தி, அங்கு மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை கற்பித்து வந்தனர். இதற்காக தன்னார்வலர்கள் மாதம் ரூ.1000 சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 3700 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு,

மையத்திற்கு தலா 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கென இரண்டு தன்னார்வலர்கள் கற்பித்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன் பின்தங்கிய ஒன்றியம் மற்றும் பள்ளி செல்லா, குழந்தை தொழிலாளர் அதிகம் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மட்டுமே இம்மையம் செயல்படும் என அரசு அறிவித்தது.

சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதுார், மானாமதுரை ஆகிய இரு ஒன்றியத்தில் ஒட்டு மொத்தமாக 1000 மையமாக சுருக்கிவிட்டனர். மற்ற மையங்களில் பணிபுரிந்த தன்னார்வலர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பள பாக்கியை வழங்காமல்,

பணியில் இருந்துவிடுவித்து விட்டனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.

Tags

Next Story