மீனவர்களிடம் பறிமுதல் செய்த வாகனம் மற்றும் மண்ணெண்ணெய் திருப்பித் தர  மனு

மீனவர்களிடம் பறிமுதல் செய்த வாகனம் மற்றும் மண்ணெண்ணெய் திருப்பித் தர  மனு
புகாரளித்த மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வாகனம் மற்றும் மண்ணெண்ணெய் திருப்பித் தர மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா மீனவர் பிரிவு செயலாளர் சகாயம் என்பவர் தலைமையில் மீனவர்கள் பிரெடி, ஜட்சன் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த சிறந்த டெபின், வள்ளவிளையை சேர்ந்த ஷைனு ஆகியோரின் வள்ளத்திற்காக பெற்ற அரசின் மானிய விலை மண்ணெண்ணெய் 200 லிட்டர் எடுத்துக்கொண்டு கடந்த 12ஆம் தேதி 20 பேர் மீன்பிடித் தொழிலுக்காக கொச்சி துறைமுகத்துக்கு வேன் ஒன்றில் எடுத்து சென்று கொண்டிருந்தோம்.

கொல்லங்கோடு அருகே நீரோடி சோதனை சாவடியில் 200 லிட்டர் மண்ணெண்ணெய் ரசீதுகளை காட்டிய பிறகும் அதனை கருத்தில் கொள்ளாமல் எங்களை வாகனத்துடன் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு ஒப்படைத்தனர். அங்கு எங்கள் வள்ளங்களுக்கான 200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்து, நாங்கள் கேரளாவுக்கு கடத்துவதாக கூறி பறிமுதல் செய்தனர்.

எனவே எங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை திரும்ப மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று அந்த மணியில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story