தஞ்சையில் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கேட்டு மனு

தஞ்சையில் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கேட்டு மனு
பாதுகாப்பு கேட்டு மனு
தஞ்சையில் டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அழிக்கப்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று கோரிக்கை மனுவினை அளித்தனர்.

ஏஐடியுசி தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோடீஸ்வரன் தலைமையில், மாவட்ட பொருளாளர் என்.இளஞ்செழியன் மேற்பார்வையாளர் எம்.கருணா, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் வருமானம் என்பது தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரும் வருவாயாக உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையொட்டி மிகப்பெரிய வருவாய் இதன் மூலம் கிடைக்க உள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 138 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜன.13-ம் தேதி முதல் ஒரு வாரம் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளில் பெரும் கூட்டம் வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி தாங்கள் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்தது போல், பொங்கல் விழாவுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் மூலம் அடிக்கடி கண்காணித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளித்து உதவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story