பூரண மதுவிலக்கு கோரி மனு

பூரண மதுவிலக்கு கோரி மனு

மதுவிலக்குகோரி மனு 

வள்ளலார் சிந்தனை பாசறை அமைப்பினர் பூரண மதுவிலக்கு கோரி மனு அளித்தனர்.
நிலக்கோட்டையில் வள்ளலார் சிந்தனை பாசறை அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் முருகன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜா ராம், அமைப்புச் செயலாளர் வடிவேல் முருகன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் சசிகுமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழகத்தில் மது போதையால் ஏராளமான விபத்துக்கள் நடப்பதை தடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழ் கலாச்சாரம் பள்ளி மாணவ- மாணவிகள் மத்தியில் மது போதை மோகத்தை தடுப்பதற்கு பள்ளிக்கல்வி மேலாண்மை குழுவை வலுப்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திடவும், வள்ளலாரின் பிறந்த தினத்திற்கு அரசு விடுமுறை மட்டும் வள்ளலாரின் போதனையை வளர்க்காது. ஆகவே வள்ளலாரின் கொள்கையை மாணவ மாணவிகள் பின்பற்ற சீரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அனஞ்சி, ஜெயராஜ், மோகன், திண்டு க்கல் மாவட்ட செயலாளர் ராஜா, நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story