இழப்பீடு தொகையை வேண்டி தனியார் இரும்பு தொழிற்சாலை ஊழியர்கள் மனு

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் 1962 முதல் 176 பேர் பணியாற்றி வந்தோம். 1983ம் ஆண்டு எற்பட்ட கடுமையான மின்வெட்டு காரணமாக தொழிற்சாலையை நிர்வாகம் எந்த வித அறிவிப்பும் இன்றி மூடிவிட்டது. இதனால் தொழிலாளர்களாகிய நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மீண்டும் தொழிற்சாலை திறக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பணியாற்றிய காலத்திற்க என பணப்பலன்கள் மற்றும் இழப்பீடு கோரி 1988ம் ஆண்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசரித்த நீதிமன்றம் 176 பேருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என 1997ம் ஆண்டு உத்தாளிட்டது. இதன் அடிப்படையில் எங்களுக்கு தர வேண்டிய இழப்பீட்டில் 3ல் ஒரு பங்கு அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் மீதமுள்ள 2 பங்கை தொழிற்சாலை நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் மீண்டும் நாங்கள் கடந்த 2000ம் ஆரண்டு வழக்கு தொடர்ந்தேம் இந்த நிலையில் எங்களில் 45 பேருக்கு மட்டுமே நிலுவை 2 பங்கு வழங்கப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே வேலை இழந்த 10 பேருக்கும் மீதமுள்ள 2 பங்கு இழப்பிட்டையும் வழங்க வேண்டும் நீது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாணை நடத்தி எங்களுக்கு இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என அவர்கள் நேற்று மாலை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story