சம்பளம் வழங்கவில்லை என துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

சம்பளம் வழங்கவில்லை என துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

துப்புரவு பணியாளர்கள்

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என துப்புரவு பணியாளர்கள்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என துப்புரவு பணியாளர்கள்மாவட்ட ஆட்சியரிடம் மனு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தினம் விழும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்காக தற்காலிக துப்புரவு பணியாளர்கள் சுமார் 123 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களுக்கு நகராட்சி மூலமாக வழங்க வேண்டிய இரண்டு மாத ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் நாராயணனை கண்டித்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலக முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர் இருந்தபோதிலும் இதுவரை துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வாங்கவில்லை என தெரிகிறது.

இதன் காரணமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுக்கு இரண்டு மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை மேலும் உடனடியாக அந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் அதன் பின்னரே அதிகாரிகள் என்னை வந்து சந்திக்க வேண்டும் என கூறி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story