அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை

மனு அளிக்க வந்த அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் 

வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டம்  நிறைவேற்ற வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் மூலம் நேரடி பதிவு, புதுப்பித்தல், பணப்பயன்கள் வழங்கப்பட வேண்டும் மேலும் டிசம்பர் 2023 ல் அழிக்கப்பட்ட தரவுகள் மீட்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட வேண்டும். வீட்டு வேலை பெண் தொழிலாளர்கள் தொழில் ரீதியான உடல்நலம், பணியிட பாதுகாப்பு, பணி நிலைமைகள் குறித்த தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு உப்பு உற்பத்தியில், ஏற்றுமதியில் 1 சதம் லெவி , குடிநீர் வசதி ஓய்வறை,கழிவறை, குழந்தைகள் காப்பகம், மருத்துவ வசதி,குடிநீர் வசதி, பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உப்பள தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் அமல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கட்டிட தொழிலாளர் பஞ்சாயத்து சங்க மாநிலத் தலைவர் கொம்பையா, தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை மாவட்ட செயலாளர் குமாரலிங்கம், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோன்மணி, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், உழைக்கும் பெண்கள் இயக்க அமைப்பாளர் ராமலட்சுமி, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநகர அமைப்பாளர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story