திருப்பூரில் மதுபான கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் மனு.

திருப்பூரில் மதுபான கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் மனு.

திருப்பூரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் மதுபான கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூரில் டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் மதுபான கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் மதுபான கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 1909 என்ற டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து மனு அளித்திருந்தனர். தொடர் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் இரண்டு மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு பலகையை பார் உரிமையாளர் கழட்டி வீசிவிட்டு தொடர்ந்து அந்த கடையை நடத்தி வருவதாகவும் மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமைநது வரும் மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story