கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் மனு
மனு அளிக்க வந்தவர்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கவுண்டையன்வலசு பகுதியில் அருந்ததியர் மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் இல்லாத ஏழைகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டி அப்போதைய திமுக அரசால் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கவுண்டையன் வலசு கிராமத்தில் வேலுமணி சொந்தமான விவசாயநிலம் 1.ஏக்கர் உள்ளது.அதில் கடந்த 12 வருடங்களாக நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
வேலுச்சாமியின் நிலத்தின் அருகில் வசிக்கும் செல்வி, ஈஸ்வரன், ராமலிங்கம், ராமசாமி, ஆகிய வேறு வகுப்பை சேர்ந்தவர்கள். தங்கள் நிலத்திற்கு தண்ணீர் வேண்டி அமராவதி ஆற்றிலிருந்து பொதுப்பணித்துறை ஆனுமதி இன்றியும். விவசாயி வேலுமணியின் அனுமதி பெறாமலும் அமராவதி ஆற்றில் இருந்து வேலுமணி விவசாய நிலம் வழியாக இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ராட்சத தண்ணீர் குழாய் பதித்து அரசு இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்தி கேபிள் மின் மோட்டாரை இயக்கி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.
இதனால் தனது சொந்த நிலத்தில் வேலுமணி விவசாய பணிகளுக்காக டிராக்டர் இயந்திரத்தை கொண்டு வந்தால் எனது தண்ணீர் குழாய் உனது நிலத்தில் செல்கிறது இதனை நீ உடைத்து விட்டால் உன்னை வேற மாதிரி கவனிக்க வேண்டி இருக்கும் எனவே உனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்யாதே இல்லை எனக்கு நிலத்தை கொடுத்துவிட்டு வேறு பக்கம் போய் நிலத்தை வாங்கிக்கொள். என பகிரங்கமாக.செல்வி, ஈஸ்வரன், ராமலிங்கம், ராமசாமி, ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் கடந்த இரண்டு வருடங்களாக விவசாய பணிகள் எதுவும் செய்யாமல் தரிசு நிலமாக நிலத்தை வைத்துள்ளார். இதனால் வேலுமணியின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாராபுரம் கோட்டாட்சியர்.திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வேலுமணி 30-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்க பாடவில்லை. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது நிலத்தில் சட்டவிரோதமாக பதித்துள்ள குழாய்களை அப்புறப்படுத்தி தரவேண்டும் என தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் மேற்கு மண்டல செயலாளர் ஒண்டிவீரன் உள்ளிட்டோர் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேலுமணியுடன் சென்று கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் இடத்தில் மனு கொடுத்தனர்.