மயானத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

மயானத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

கைலாசசமுத்திரம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
மயானத்தை வீட்டு மனைகளின் பாதையாக்கி ஆக்கிரமித்து வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மயானத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்: ஆர்.எஸ்.மங்கலம் பாரனூர் ஊராட்சி கைலாச சமுத்திரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 23 சென்ட் பரப்பில் மயானம் உள்ளது. இந்த மாயனத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் வீட்டு மனை புரோக்கர்கள் பாதையாக்கி வீட்டுமனைகளுக்கு பாதையாக்கி வருவதாகவும், தாலுகா அலுவலகம் செல்லும் வழியாகவும் மாற்றி வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story