வீட்டுமனை பட்டா வழங்க கோரி பழங்குடி மக்கள் மனு

அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கீழ்குப்பம் காலனியில் கடந்த பலத்தலைமுறைகளாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடி இனமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் குடியிருந்து வரும் வீடுகள் மிகவும் பழுதான நிலையில் இருப்பதாலும் ஒவ்வெரு வீட்டிலும் பலபேர் வசித்து வருவதால் பெரும் சிரமமாக உள்ளது, மேலும் இவர்கள் குடியிருந்து வரும் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இப்பதால் மழைக்காலங்களில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது, ஆகையால் அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்ட வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இது வரை எந்த அதிகாரியும் கண்டுக் கொள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அப்போது குடியிருந்து வரும் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பது மட்டுமின்றி ஒவ்வொரு வீடுகளில் பலபேர் வசித்து வருவதால் பெரும் சிரமமாக உள்ளது மேலும் குடியிருந்து வரும் பகுதியில் முறையான அடிப்படை வசதியும் இல்லை ஆகையால் அரசு புறம் போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story