வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் மனு

வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் மனு
கிராம நிர்வாக உதவியாளர்கள் மனு அளிப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட எடப்பாடி மற்றும் சங்ககிரி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் கடந்த 23 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் வழங்கி வந்த வாரிசு வேலையை மீண்டும் வழங்கிட வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளருக்கு வழங்கிய எரிபொருள் படியை மீண்டும் வழங்கிட வலியுறுத்தியும், வரையறுக்கப்பட்ட காலமுறையை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி பிரிவில் இணைக்க வேண்டியும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு வாகன ஓட்டுனர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகியிடம் இன்று மனு வழங்கினர். முன்னதாக எடப்பாடி மற்றும் சங்ககிரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு தங்கள் மனுக்களை வழங்க வந்தனர் . அப்போது 70 நபர்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க இயலாது என்பதால் ஐந்து ஐந்து நபர்களாக அனுமதி பெற்று வருவாய் கோட்டர் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர். இதனால் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story