அரசு பேருந்து வசதி கோரி கிராம மக்கள் மனு
அரசு பேருந்து வசதி செய்து தரக்கோரி இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுடன் மாசார்பட்டியை சார்ந்த கிராம பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் இருந்து நென்மேனி , சாத்தூர் போன்ற பகுதிகளுக்கு சென்று தான் சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் பத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் படித்து வருவதாகவும் மேலும் வேலைவாய்ப்புக்காக பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் நென்மேனி சாத்தூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதாகவும் இந்த பகுதியில் இருந்து செல்வோர்கள் ஆற்றுப் பாதையை பயன்படுத்தி வந்தததாகவும், தற்போது ஆற்றுப் பாதையில் நீர் செல்வதால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், எனவே தாங்கள் கிராமத்தில் இருந்து நென்மேனி, சாத்தூர் செல்வதற்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை இருப்பதாகவும் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் இந்த 30 கிலோமீட்டர் மாற்று பாதையில் சுற்றி வருவதாகவும் தங்கள் கிராமத்திலிருந்து நென்மேனி மற்றும் சாத்தூர் செல்வதற்கு உரிய பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரை அந்த கிராமத்தைச் சார்ந்த 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கிராம பொதுமக்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்லாமல் சீருடை அணிந்தவாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
Next Story