மாவட்ட ஆட்சியரிடம் மமக கட்சி சார்பில் மனு

மாவட்ட ஆட்சியரிடம் மமக கட்சி சார்பில் மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

பாரதிய ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்களை விமர்சித்து பேசி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில் மனு இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்து உள்ளது நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்து இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற உள்ளது இந்நிலையில் வட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜாதியைக் கொண்டு மதத்தைக் கொண்டோ மொழியை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணைய உத்தரவை மீறி இஸ்லாமிய மக்களை விமர்சித்து வாக்கு வங்கிக்காக தேர்தல் பிரச்சாரதில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவருமான லட்சுமிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story