சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி
சாலையோர கடைகள்
பழநி கிரிவலவீதியில் சாலையோர கடைகளுக்கு அனுமதி கோரிய மனு ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியானது.
திண்டுக்கல் மாவட்ட சாலையோர சிறு விற்பனையாளர் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி நகராட்சி பகுதியில் சுமார் 2 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். கிரிவல வீதியில் மட்டும் சுமார் 500 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். போக்குவரத்திற்கு எந்தவித இடையூறின்றி வியாபாரம் செய்கிறோம். பலரும் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டையும் பெற்றுள்ளனர். இதற்கான காலம் முடிந்து விட்ட நிலையில் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. விற்பனைக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை விற்பனை பகுதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென அதிகாரிகளும், போலீசாரும் எங்களது கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது என்றனர்.
Next Story