வெளிநாட்டு சிறையில் உள்ள கணவரை மீட்டு தரக்கோரி மனு

வெளிநாட்டு சிறையில் உள்ள கணவரை மீட்டு தரக்கோரி மனு

மனு அளித்த பெண்


ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி கூலி தொழிலாளியாக சவுதி அரேபியாவுக்கு சென்ற ராமநாதபுரம் மீனவரை சந்தேகத்தின் பேரில் சவுதி அரேபியா சிறையில் அடைப்பு. கணவரை மீட்டு தரக் கோரி மனைவி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்.

ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவ பெண்மணி நந்தினி மற்றும் அவரது குழந்தைகள், உறவினர்கள் இன்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு கொடுத்து முறையிட்டனர். அப்போது தன்னுடைய கணவர் சமயகாந்த் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழிலாளியாக சவுதி அரேபியா நாட்டுக்குச் சென்று அங்குள்ள ஜுபைல் நகரில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்ததாகவும்,

கடந்த 9ம் தேதி திடீரென அவரை சவுதி அரேபியா போலீசார் அழைத்துச் சென்று சிறையில் அடைத்திருப்பதாகவும் அவரை எதற்காக பிடித்து சென்றனர் என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவரைப் பிடித்து சென்ற ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அவருடைய அறை நண்பர்கள் மூலம் தங்களுக்கு தகவல் வந்ததாகவும்,

அவரை நம்பித்தான் தங்கள் குடும்பமும் வயதான அவரது பெற்றோரும் வசிப்பதாகவும் உடனடியாக அவரை எப்படியாவது மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். .

Tags

Next Story