சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி மதிமுகவினர் மனு வழங்கல்
பள்ளிபாளையம் மதிமுக சார்பில் காவிரி ஆற்றில் சாயக் கழிவு நீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி ஆட்சியருக்கு கோரிக்கை மனு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர மதிமுக சார்பில், செயலாளர் ரமேஷ் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று வழங்கியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா உட்பட்ட ஆவத்திபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், களியனூர் சமயசங்கிலி உள்பட 40-க்கும் இடங்களில் சாயப்பட்டறைகள் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் இயங்கி வருகிறது மேலும் அக்ரஹாரம், புதன் சந்தை மற்றும் பெரியார் நகர் ,வசந்தா நகர் உள்ளிட்ட இடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அதிகளவு இயங்கி வருகிறது. பெரும்பாலான சாயப்பட்டறைகளில் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு, அது சாக்கடை நீர் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. கடுமையான வெப்பத்துடன் இரவு நேரத்தில் வெளியேற்றப்படும் இந்த நீரால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், இருமல் ,ஆஸ்துமா போன்ற வியாதிகளும், கழிவு நீரை பருகுவதால் எண்ணற்ற உடல் உபாதைகளும் ஏற்பட்டு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உருவாக காரணமாக தற்போது காவிரி ஆறு மாறி உள்ளது. பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு விளங்கி வருகிறது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ள நிலையில்,அவர்கள் பாதிக்காத வண்ணம் இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags
Next Story