வெளிநாட்டில் இறந்தவர்கள் உடலை கொண்டு வர மனு

வெளிநாட்டில் இறந்தவர்கள் உடலை கொண்டு வர மனு

வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டு தரக்கோரி மனைவி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்


வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டு தரக்கோரி மனைவி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்

வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டு தரக்கோரி மனைவி, மனு அளித்துள்ளார். இதுகுறித்து மனைவி தங்கபொண்ணு, மகன் பவனேஷ்குமார் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எனது கணவர் குமார், 39; இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியா நாட்டில் தக்ரேன் என்ற பகுதியில் தனியார் ஆயில் நிறுவனத்திற்கு கூலி வேலைக்குச் சென்றார். நேற்று முன்தினம் எங்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு, குமார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அந்நிறுவன மேலாளர் போனில் தொடர்பு கொண்டு எங்களுக்கு தகவல் தெரிவித்தார். கணவர் இறப்பு தொடர்பாக உரிய விசாரணை செய்து, அவரது உடலை உடனடியாக மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story