அரியலூரில் கனரக வாகனங்கள் செல்லதடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு

அரியலூரில் கனரக வாகனங்கள் செல்லதடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு

மனு அளிக்க வந்த மக்கள்

அரியலூரில் கனரக வாகனங்கள் செல்லதடை விதிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் செங்குழி- பெருமாள்தீயனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுஅளிக்க வந்தனர். அந்த மனுவில் தங்களது கிராமத்திலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் குறுகிய சாலையின் வழியாக 12 நபர்களுக்கு சொந்தமான ஏரியில் மண் எடுப்பதற்காக கனரக வாகனங்கள் இந்த குறுகிய சாலையை பயன்படுத்தி வருவதாகவும்,

இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

எனவே செங்குழி- பெருமாள்தீயனூர் கிராமம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது. இதனையடுத்து அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவை சந்தித்து வழங்கபட்டது. இதில் அக்கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story