சட்டவிரோத மண் கடத்தல் தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
மனு அளிக்க வந்த பொதுமக்கள்
கூத்தக்குடியில் நடக்கும் சட்டவிரோத மண் மற்றும் மணல் கடத்தலை தடுக்கக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு; எங்கள் பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் கிராவல் மண்மற்றும் செம்மண்ணை இரவு, பகலாக எடுத்து வெளியில் விற்பனை செய்கிறார்.மற்றொரு நபர் ஆற்றுமணலை எடுத்து விற்பனை செய்கிறார். இதனால் நீர் நிலைகளில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருப்பதுடன், அதில் கால்நடைகளும் விழுந்து இறந்துள்ளது. மேலும், மண் ஏற்றிக்கொண்டு அடிக்கடி சென்ற வாகனங்களால், இறைஞ்சிக்கு செல்லும் வழியில் உள்ள குறுகிய பாலம் உடைந்து சேதமடைந்து விட்டது. அதிகளவு மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக மண் எடுப்பதை நிறுத்துவதுடன், இதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story