ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல ஆட்சியரிடம் மனு
ஒன் டூ ஒன் பேருந்துகள்
ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல ஆட்சியரிடம் மனு
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, அமமுக சாா்பில் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று வருகிறாா். இந்நிலையில் திருநெல்வேலி - தென்காசி இடையே இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகள் ஆலங்குளத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலங்குளம் நகர அமமுக செயலா் சுப்பையா, ஆட்சியரிடம் மனு அளித்தாா். கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
Next Story