மழைநீர் வடிகால்களை சீரமைக்க மாநகராட்சி ஆணையரிடம் மனு

மழைநீர் வடிகால்களை சீரமைக்க மாநகராட்சி ஆணையரிடம் மனு

மனு அளித்தவர்கள்

மதுரையில் மழை நீர் வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலனிடம் மனு அளிக்கப்பட்டது

மதுரையில் மழை நீர் வடிகால்களைச் சீரமைக்க வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்சி சார்பில் மதுரை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலனிடம் திங் கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இ

துகுறித்து அந்தக் கட்சியின் மதுரை மாவட்டச் செயலர் மா.க ணேசன் அளித்த மனு விவரம்: மதுரை மாநகராட்சிக்கு உள் பட்ட 5 மண்டலங்களில் மழைநீர் வடிகாலாக உள்ள கிருதுமால் நதி, சிந்தாமணி, பந்தல்குடி, அனுப்பா னடி, அண்ணா நகர் செண்பகத் தோட்டம் கால்வாய்கள், மாடக்கு ளம் கண்மாயில் இருந்து வரும் கால் வாய்கள் ஆகியவற்றை தூர்வார வேண்டும். இதேபோன்று, செல்லூர், குல மங்கலம் சாலை, திருப்பரங்குன் றம் பிரதான சாலையில் பைக்காரா பகுதி, அழகப்பன் நகர் பகுதி, பெத் தானியபுரம் அண்ணா நகர் பிரதான சாலை, கோச்சடை, சம்மட்டிபுரம், கிறுதுமால் நதி பாம்பன் சாலை, வில்லாபுரம் வீட்டு வசதிவாரியகுடி யிருப்பு சாலை,

அண்ணா பேருந்து நிலையம், அரவிந்த் கண் மருத்துவ மனை, மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி உள்ள சாலை கள் சீரமைக்கப்பட வேண்டும். மேலும், புறவழிச் சாலை, தீக்க திர் அலுவலகச் சாலை, சிம்மக்கல் பகுதி தைக்கால் தெரு செட்டியார் தோப்பு பகுதிகளில் புதைச் சாக் கடை கழிவு நீர் வெளியேறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். சாலைகளில் தேங்கும் குப்பை களை அகற்ற நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

அனைத்து அனைத்து பகு திகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப் பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டது. அப்போது, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயரா ஜன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஜா. நரசிம்மன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், பகுதிக் குழுச் செயலர்கள் பி. ஜீவா. اهل.‎ ஸ்டாலின், வி. கோட்டைச்சாமி. ஏ. பாலு, ஜெ. லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story