கோடாங்கிபட்டி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மனு அளித்த மக்கள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. மேலும் இந்த மனுவில் தமிழ்நாடு அரசின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறையினரால் கடந்த 1994 ஆம் வருடம் கோடங்கிபட்டி கிராம வருவாய் துறைக்கு கட்டுப்பட்ட புல எண் 459/ 2 A -ல் 3 ஏக்கர் 6 சென்ட் நிலத்தினை அரசால் கையாக படுத்தப்பட்டு நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு நில உரிமை சான்று வழங்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது வரை அந்த நிலத்துக்கு அரசு வழங்கிய நிலத்திற்கு நுழைவதற்கு மாற்று சமுதாய அமைப்புகள் நுழைய விடாமல் இடையூறு செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதனால் அரசு சார்பில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பும் மற்றும் அந்த இடத்தில் வசிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.