நரசிங்கபுரம் நகராட்சிக்கு ௯டுதலாக மேட்டூர் குடிநீர் வழங்க அமைச்சர் நேருவிடம் மனு

நரசிங்கபுரம் நகராட்சிக்கு ௯டுதலாக மேட்டூர் குடிநீர் வழங்க அமைச்சர் நேருவிடம் மனு
X

அமைச்சரிடம் மனு வழங்கல்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் 18 வார்டு பகுதியில் உள்ளன இப்பகுதியில் மேட்டூர் குடிநீர் கூடுதலாக 1 MLD வழங்க சேலம் வருகை புரிந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களிடம் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர செயலாளர் வேல்முருகன் மனு வழங்கினார்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் தற்போது நகராட்சி சார்பாக வழங்கக்கூடிய மேட்டூர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்குவதற்கு நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர்,

நரசிங்கபுரம் திமுக நகர செயலாளர் வேல்முருகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சேலம் வருகை புரிந்த நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சருக்கே நேரு அவர்களிடம் நரசிம்மர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கூடுதலாக 1MLD மேட்டூர் குடிநீர் வழங்க கோரிக்கை மனு வழங்கினார்கள்.

Tags

Next Story