காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு
மனு வழங்கிய சிறுவர்கள்
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமுட்டம் ஒன்றியம் ஆதிவராகநல்லூர் கிராமத்தில் மக்களை சந்தித்த போது மக்கள் நியாய விலைக் கடை வேண்டும் சாலை வசதிகள் வேண்டும் போர்வெல் வேண்டும் முதியோர்கள் உதவித் தொகைகள் வரவில்லை நியாய விலைக் கடையில் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை பேருந்து நிறுத்தம் இல்லை என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன் பின்னர் உரிய அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

Tags

Next Story