மகளிர் உரிமைத்தொகை பெற்று தரக்கோரி எம்எல்ஏவிடம் மனு
மகளிர் உரிமைத்தொகை பெற்று தரக்கோரி எம்எல்ஏவிடம் மனு
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் சிறுமையூர் ஊராட்சியில் நியாய விலை கடை தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது இதனால் மழையின் நியாய விலை கடையில் இருந்த பொருட்கள் மழை நீர் கசிவால் பாதிக்கப்பட்டது இந்நிலையில் புதிதாக நியாய விலை கடை கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் மனு அளித்தனர். இதனை அடுத்து செய்யூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ஒதுக்கீடு செய்து நியாய விலை கடை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியாய விலை கடை கட்டுவதற்கு பூமி அடிக்கல் நாட்டப்பட்டு நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டது. இதனை எடுத்து கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார் கவுன்சிலர் சிம்பு முன்னிலை வகித்தார் விசிக முகாம் நிர்வாகி கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதனை எடுத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று தரக்கோரி எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஆர்டிஓ தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.