கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டி மனு

கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டி மனு

கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டி மனு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம், மாத ஓய்வூதியம் வழங்க கோரிக்கை மனு.
விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பின் மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பல லட்சம் பூசாரி பெருமக்கள் திருக்கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர் இதில் 60 ஆயிரம் பூசாரிகள் பேரமைப்பில் இருக்கின்றனர். பூஜை செய்யும் கோவில்களின் சார்பில் போதுமான பொருளாதார உதவி இல்லாத காரணத்தால் தாங்கள் செய்யும் திருப்பணியுடன் பல கஷ்டங்களையும், ஏழ்மையும் சேர்ந்து சுமந்து பயணிக்கின்றோம். தொடர்ந்து பல போராட்டங் கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாக கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஆண்டுக்கு 72 ஆயிரத்துக்குள் வருவாய் இருக்க வேண்டுமென சான்றிதழ் கோரு வது, நலவாரியம் பதிவு செய்யும் வலைதள செயலி இயங்க வில்லை போன்ற பல காரணங்களால் பூசாரிகளால் சலுகைகளை பெற முடியவில்லை. இதனால் பூசாரிகளின் கருத்துக்களை பெற்று மாவட்டங்கள் தோறும் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருக்கிறோம். அதில் பூசாரிகளுக்கு மாத ஊதியம், மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மற்றும் நலவாரிய அட்டை பெறுவதற்கு பூசாரிகளுக்கு ஆண்டு வருவாய் சான்று கோருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பூசாரிகள் நல வாரியம் செவ்வனே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, கோவில்களுக்கு தீப எண்ணெய் மற்றும் பூஜை பொருட்களை வழங்க வேண்டும், கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story