ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி போராட்டம் நடத்த மனு
கள்ளக்குறிச்சி கரடிசித்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கரடிசித்துாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்துாரை சேர்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் என்பவர் மனு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கரடிசித்துார் கிராமத்தில் ஏரி வாய்க்காலில் உள்ள மதகினை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக மதகு திறக்கப்படாமல் இருப்பதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சமத்துவ மயானமும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஏரி மதகு மற்றும் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எனவே, ஏரிமதகு மற்றும் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வரும் 1ம் தேதி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருக்கிறார்.
Next Story