அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வசிபோருக்கு வீடு வழங்க கோரி மனு

அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வசிபோருக்கு வீடு வழங்க கோரி மனு
மனு வழங்கிய மக்கள்
விருதுநகர் மாவட்டம் ஆனைக்குட்டம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் நபர்களுக்கு வீட்டை வழங்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆணைகுட்டம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் நபர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசினால் வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறி அங்கு இருந்த சேதமடைந்த 109 வீடுகள் உடைக்கப்பட்டதாகவும் இதை அடுத்து அந்த வீட்டில் இருந்த பொதுமக்கள் வாடகை வீடுகளிலும் அருகில் செட்டு போட்டு வசித்து வருவதாகவும்,

இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆறு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும், குடிநீர் போன்ற வசதிகள் எதுவும் அமைக்கப்படாமல் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாகவும்

,எனவே வீடுகளை பொதுமக்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என கூறி அதை தொடர்ந்து குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் எனக் கூறி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆனைக்கூட்டம் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story