மாநகராட்சி பணியாளருக்கான அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மனு..!

மாநகராட்சி பணியாளருக்கான அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மனு..!

காஞ்சிபுரத்தில் பணிபுரியும் விசைப்பம்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநகராட்சி அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


காஞ்சிபுரத்தில் பணிபுரியும் விசைப்பம்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநகராட்சி அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் ஒரு நாள் கூட்டம் நடைபெறுவது இதில் பொதுமக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது வழக்கம். இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் இருந்ததால் கடந்த இரண்டு மாதமாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இன்று முதல் தேர்தல் நடத்திய விதிகள் திரும்ப பெறப்பட்டதால் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தனி நபர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி மனு அளித்தனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் விசை பம்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் தொகுப்பு ஊதிய பணியில் பெருநகராட்சியாக இருந்த நிலையில் பணிபுரிந்து தற்போதும் தொடர்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு நகராட்சி அடிப்படையில் நிர்மகிக்கப்பட்ட ரூபாய் 12000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு நாளது வரை ஊதியம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேற்படி குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி மாநகராட்சி பணியாளருக்கான அடிப்படை ஊதியமான ரூபாய் 14,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யவும் அதற்கான நிலுவைத் தொகையினை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இடம் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், கடந்த 29 5 2024 அன்று பதிவு அஞ்சல் மூலம் மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு விண்ணப்பம் செய்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதனால் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்க கோரி மனு அளித்துள்ளோம் குறைந்தபட்ச ஊதியத்தை வைத்து குடும்பம் நடத்த இயலாத நிலையில் அதை அரசாணைப்படி உயர்த்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தனர்.

Tags

Next Story