அமராவதி அணையை தூர்வார மனு!

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையை தூர்வார வேண்டும் என பாசன சங்க விவசாயிகள் தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அமராவதி அணையை தூர்வார வேண்டும் பாசன சங்க விவசாயிகள்- தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்!. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:உடுமலை அருகே உள்ள அமராவதி அணையை தூர்வார வேண்டும் என பாசன சங்க விவசாயிகள் பொதுமக்கள் தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளர் கோபி இடத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய ஆயக்கட்டு பாசன சங்கம் 16 சங்கமம் புதிய ஆயகட்டு பாசன சங்கம் 28 சங்கங்களும் ஒன்றிணைந்து தனித்தனியாக மனுவை செயற்பொறியாளரிடம் கொடுத்தனர் மேலும் குடிமராமத்து பணிகளை பாசன சங்க விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவையும் கொடுத்திருந்தனர்.

இதில் அமராவதி அணை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. அமராவதி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பாம்பாறு, சின்னாறு, தேனாறு மற்றும் சிற்றாறுகள் நீர் ஆதாரமாக விளங்கி வருகின்றது. இந்த அணையை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுப்பாசனம் மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. மேலும், அமராவதி அணை மூலமாக 110-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமராவதி அணை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் சுமார் 20 அடிக்கும் மேலாக சேறும், சகதியும் நிரம்பியுள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் அதிகளவு தண்ணீரை அணையில் தேக்கி வைக்க முடிவதில்லை. நீர்மட்டம் சரிவு இதனால் வெள்ளப்பெருக்காக வருகின்ற தண்ணீர் உபரிநீராக அமராவதி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் அணையின் நீர்மட்டம் விரைவில் சரிந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடுகின்றது.

இதனால் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக அங்குள்ள சிற்றாறுகளின் மூலமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் குறைந்து போனது.இதனால் அமராவதி அணையை நீர் ஆதாரமாக கொண்டுள்ள பாசன நிலங்களுக்கும், கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இருப்பினும் அணையில் இருந்த நீர் இருப்பை வைத்து குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு கடந்த மாதம் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென சரிந்து விட்டது.சுமார் 20 அடிக்கும் மேலாக சேறும், சகதியும் நிரம்பி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால் தற்போது சுமார் 10 அடிக்கு மட்டுமே அணையில் நீர் இருப்பு உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அணையில் உள்ள மீன்களுக்குள் இடநெருக்கடி ஏற்பட்டு வருவதால் மீன்கள் உற்பத்தியும் குறைந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அமராவதி அணைக்கு தாகம் தீர்க்க வருகின்ற யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும் போதிய தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் அமராவதி அணையின் மூலமாக பாசனம் பெற்று வருகின்ற விவசாய நிலங்கள் முழுவதும் பாலைவனமாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.

மேலும், விவசாய நிலங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் குடிநீருக்காக மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் அமராவதி அணையை நீர் ஆதாரமாக நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே காலம் தாழ்த்தாமல் அமராவதி அணையை தூர்வாருவதற்கு உண்டான நடவடிக்கைகளை அரசு உடனே தொடங்க வேண்டுமென பாசன சங்க விவசாயிகள் செயற்பொறியாளர் கோபியிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story