விபத்தில் சிக்கும் ஓட்டுனரின் தண்டனைவாபஸ் பெற கையெழுத்து இயக்கம்
விபத்தில் சிக்கும் ஓட்டுனரின் தண்டனையை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி, எலச்சிபாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
விபத்தில் சிக்கும் ஓட்டுனரின் தண்டனையை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி, எலச்சிபாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
எலச்சிபாளையம் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் நேற்று, அருகில் சி.ஐ.டி.யு., நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்ட குழு உறுப்பினர் முனியப்பன் தலைமையில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் தற்சமயம், ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தி மரணம் உண்டானால், அவர் ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் ஏழு லட்சம் அவதாரம் கட்ட வேண்டும் என அரசு சட்டம் இயக்கி உள்ளது. இதனால், ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இத்திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. வரும் 6ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இங்கு பெறப்படும் கையொப்பங்கள் அந்தந்த போக்குவரத்து ஆய்வாளர்களிடம் மனு கொடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் சுரேஷ், கிளை நிர்வாகிகள் சேகர், மாபாஷா, அசோக், சுப்ரமணி உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
Next Story