பள்ளிக்கு செல்ல கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு
மனு அளித்த மாணவர்கள்
பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கையில் தங்கள் கிராமத்தில் இருந்து பல மையில் தூரம் சென்று பாடாலூர் பள்ளியில் பிள்ளைகள் படித்து வருவதாகவும்
இதில் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்வதற்கு போதுமான நேரத்தில் பேருந்து இல்லாததால், பிள்ளைகள் நடந்து பள்ளி செல்ல கூடிய நிலை உள்ளது என்றும், மேலும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையும் இருந்து வருகிறது ஆகவே இது குறித்து பலமுறை போக்குவரத்து கழக அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால்
தற்போது மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்து இருப்பதாகவும் இதில் பள்ளி மாணவ மாணவிகள், பள்ளிக்குச் செல்வதற்கும் மீண்டும் ஊருக்கு வருவதற்கும், போதுமான நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.