மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
செந்தண்ணீர் புரம் பகுதியில் 10 வயது புங்கன் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருச்சி மாவட்டம் மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் இளங்கோ, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் ஒரு மனு அளித்தார். அதில் திருச்சி மாநகராட்சி செந்தநீர்ப்புரம் நுழைவுப் பகுதியில் மேற்கு எல்லை முதல் முத்து மணிநகர் வரை மக்கள் சக்தி இயக்கத்தால் மரங்களை வளர்த்துள்ளோம். தற்போது அங்கு மழைநீர் வடிகால் கட்டும் போது கூட அந்த மரங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்கு திட்டமிட்டு கட்டியிருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் அங்கு நன்கு வளர்ந்து இருந்த பத்து வயது புண்கள் மரத்தை மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். எனவே மரத்தை வெட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மனு அளித்தனர்
Next Story