பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு
மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்
கட்டிய வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோவிந்தராஜபட்டினம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் கட்டிய வீடுகளுக்கு பட்டா தரக்கோரி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்: உளுந்துார்பேட்டை அடுத்த கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எங்களுக்கு சொந்தமான இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகிறோம். அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் முழுமையாக செலுத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. எங்கள் கிராமத்திற்கு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலரிடமும் மனு அளித்த நிலையில், அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 3000 ரூபாய் வீதம் வாங்கிக்கொண்டு, பட்டா தராமல் அலைக்கழித்து வருகின்றனர். எனவே, எங்களின் குடியிருப்பு பகுதிக்கு வீட்டு மனைப்பட்டா கொடுத்து உதவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story