குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆட்சியருக்கு மனு

குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆட்சியருக்கு மனு

கரூர் மாவட்டத்தில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.


கரூர் மாவட்டத்தில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டு ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிட தாலுகா, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கூடலூர் கிழக்கு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், குடிநீர் தேவை குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை பொதுமக்கள் மனு அளித்தும், குடிநீர் வசதி தர செய்து தரவில்லை எனக் கூறி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தோழர்களம் - தமிழ்நாடு அமைப்பின் மாநில அவைத் தலைவர் ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் வரும் மே 8-ம் தேதி பொதுமக்களுடன் தோழர் களமும் இணைந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுக்கும் வரை, காலி குடங்களுடன் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story