மேம்பால சப்- வேயை மாற்றி அமைக்க கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மேம்பால சப்- வேயை மாற்றி அமைக்க கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் மற்றும் ஆலத்தூரை சேர்ந்த கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரூர் கிராமத்தின் அருகே காரை பிரிவு சாலை இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அதனை அடுத்துள்ள இரூர் கிராம மக்கள் சென்று வருவதற்காக சப்வே ஒன்று அமைக்க உள்ளனர், இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வங்கி, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பள்ளிக்கூடம் ஆகியவை அமைந்துள்ளது . இந்தபகுதியில் பாதை அமைக்காமல் 250 மீட்டர் தூரம் தள்ளி அமைக்க உள்ளனர். இதை மாற்றி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது ஒப்பந்தப்படி வேலை நடக்கும் என்று தெரிவித்தார். சப்-வேயை மாற்றி அமைக்காவிட்டால் போராட்டம் செய்யவுள்ளோம். என்றனர். மேலும் இதே போன்று ஆலத்தூர் பிரிவு சாலை பகுதிகளும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவதால் அங்கும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சப்வே மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர்.

Tags

Next Story