அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு !

அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு !

அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் டாக்டர் அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், "திமுக திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ந்து சாதிய படுகொலைகள், ஆணவ படுகொலைகள், அரசியல் சார்ந்த படுகொலைகள் என்று நடந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராய விற்பனையும் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமா? சாதிவெறியில் மனிதனின் அத்தியாவசிய தேவையான குடிநீரில் வன்மத்துடன் மலம் கலக்கும் அவலமும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடக்கிறது. நீட் தேர்வு சம்பந்தமான பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் தற்கொலையில் ஈடுபடுகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்தாத திமுக அரசு என்று இன்னும் பல பக்கங்களுக்கு திராவிட மாடலின் அவலத்தை எழுதலாம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டு உள்ள அனைத்து பிரச்சனைகளையும் கண்டு காணாததுபோல் இருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர் படுகொலைகளுக்கு தமிழக திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். திமுக தனது இயலாமையை ஒப்புக்கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும்." இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story