நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் 

நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் நிலுவை ஊதியத்தை விரைந்து வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
நூறுநாள் வேலைத் திட்ட சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கம் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். பாஸ்கர் ஆகியோர் தலைமையில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜாங்கம், மனையேறிப்பட்டி கிளைச் செயலாளர்கள் முத்தையா, பாலமுருகன், வடுகன் புதுப்பட்டி கிளைச் செயலாளர் துரைராஜ் மற்றும் முன்னணி தோழர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், வறுமையிலும், சிரமத்திலும் வாழ்ந்து வரும் பொது மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் மனையேறிப்பட்டி ஊராட்சி, மனையேறிப்பட்டி ஆதிதிராவிட மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சுடுகாட்டு பாதையில் மின் விளக்கு இல்லாமல் உள்ளது. மேலும், கழிவுநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த நீர் தேக்கத் தொட்டிகளை சீர் செய்து கொடுக்க வேண்டும். இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story