கல்குவாரி அனுமதி மற்றும் ஏலத்தை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
கல்குவாரி அனுமதி மற்றும் ஏலத்தை நிறுத்தக் கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட கிராம மக்கள் பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, பேரளி, கவுல் பாளையம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டகிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து இதற்கான கோரிக்கை மனுவை அளித்தவர்கள், இது குறித்து தெரிவிக்கையில், கல்பாடி, பேரளி, கவுல் பாளையம் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள குவாரிகளில் கனிவள கொள்ளை நடைபெறுகிறது என்றும் மேலும் உயிரிழப்புகள் அதிகமாக நடைபெறுகிறது ஆகவே இந்த குவாரிஅனுமதியை ரத்து செய்ய வேண்டும், புதிதாக விடப்பட உள்ள ஏலத்தையும் நிறுத்த வேண்டும் என்று கடந்தவராம் கோரிக்கையை முன்வைத்தும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், அதையும் மீறி இன்று குவாரி ஏலம் நடைபெறுகிறது இந்த ஏலம் முழுக்க ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே செயல்படுகிறது. ஆகவே தங்கள் பகுதியில் உள்ள மக்கள் உயிரை காப்பாற்றுவதற்கு ஏலத்தை உடனடியாக நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டத்தோடு தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை. உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க தயராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Next Story