பாம்பூரி வாய்க்கால் உடைப்பை சீரமைக்க கலெக்டரிடம் மனு

பாம்பூரி வாய்க்கால் உடைப்பை சீரமைக்க கலெக்டரிடம் மனு

மனு அளித்த விவசாய சங்கத்தினர்

பாம்பூரி வாய்க்கால் உடைப்பை சீரமைக்க குமரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

குமரி மாவட்டம் செல்லங்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் சின்ன நாடார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் ரவி, மாவட்ட தலைவர் சேகர் உள்ளிட்டவர் குமரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:- 2017 ஆம் ஆண்டு ஒக்கி புயலின் போது ஏற்பட்ட கனமழையில் பாம்புரி வாய்க்கால் கருங்கல்,

செல்லங் கோணம் ஏலாவில் பெரும் உடைப்பு ஏற்பட்டு சுமார் 200 ஏக்கர் அளவில் பயிர்கள் அழிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பார்வையிட்டு அந்த இடத்தில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக சரி செய்தனர்.

மீண்டும் 2021-ல் மழையின் போது அடுக்கி இருந்த மணல் மூடைகள் அடித்து சென்றது. இதனால் மீண்டும் விளைநிலம் வெள்ளக்காடாக மாறியது. அது முதல் கொண்டு விவசாயிகளின் விடாமுயற்சி காரணமாக வாய்க்கால் உடைப்பு சீரமைத்திட ரூபாய் 33.60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தக்கலை உதவி பொறியாளர் (நீர் வளம்) அறிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது 2024 மே மாதம் தற்போதைய கோடை மழையில் மீண்டும் உடைப்பு எடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருநூறு ஏக்கர் அளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

எனவே பாம்பூரி வாய்க்கால் உடன் சீரமைத்திட சம்மந்தபட்ட அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story