பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் கோரிக்கை மனு
சிவகாசி அருகே நாராணபுரம் காலனியிலுள்ள பொதுமக்கள் வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள மயானத்தை இடமாற்றம் செய்யக்கோரியும்,குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்கவும், சீரான முறையில் குடிநீர் வழங்க கோரியும்,அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனையடுத்து, இந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Next Story