விமான நிலைய விரிவாக்க பணியை கைவிட திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

விமான நிலைய விரிவாக்க பணியை கைவிட திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

கனிமொழி எம்பியிடம் மனு 

4 ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சேலம் விமான நிலைய விரிவாக்க பணியை கைவிட கோரி தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலத்திற்கு வந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி.யிடம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பணியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யும் பணியால் காமலாபுரம், தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் பகுதிகளில் பல ஏக்கரில் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்படும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு அல்லது இழப்பீடு குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் தெளிவான திட்டங்கள் இல்லை. ஏற்கனவே, விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

விவசாய நிலங்கள், வீடுகள் இழப்பதால் சுமார் 4 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, விமான நிலைய விரிவாக்க திட்டத்தை கைவிட்டு அதற்கு பதிலாக சேலம் மாநகருக்கு மிக அருகில் உள்ள டால்மியா மேக்னசைட் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் அல்லது இரும்பாலை திட்டத்திற்கு கையகப்படுத்திய விவசாய நிலத்தில் பயன்படுத்தாத 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து புதிய விமான நிலையத்தை அமைக்கலாம். இதன்மூலம் போக்குவரத்திற்கு சேலம் மக்களுக்கு மிக எளிதாக இருக்கும். இதுகுறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தி.மு.க. அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story