நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அமைச்சரிடம் மனு 

நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அமைச்சரிடம் மனு 

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய்பட்டணம் முதல் அரையந்தோப்பு, முள்ளூர்துறை செல்லும் கடலோர சாலை கடலரிப்பால் சேதமடைந்தது. இதனால் அவ்வழியாக வந்துசென்ற சில பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. தடம் எண் 87 ,மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்டு புதுக்கடை,தேங்காய்பட்டணம்,முள்ளூர்துறை வழியாக இனயம் செல்லும் பேருந்து, தடம் எண்.

509,தேங்காய்பட்டணத்தில் இருந்து புறப்பட்டு முள்ளூர்துறை,ராமன்துறை,இனயம், கருங்கல் வழியாக திருநெல்வேலி செல்லும் பேருந்து மற்றும் 9 -இ ராமன்துறையில் இருந்து புறப்பட்டு இனயம்,கருங்கல் வழியாக நாகர்கோயில் சென்று வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது மேற்படி சாலை நெடுஞ்சாலை துறையினரால் சீரமைக்கப்பட்டுள்ளது.

எனவே நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனடியாக அதே தடத்தில் இயக்க கேட்டு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை தலைமை செயலகத்தில் நேரடியாக சந்தித்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story