கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மனு அளித்த கிராம மக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சியை பேரூராட்சியாக அறிவிக்கபட உள்ளதாக் தகவல் வெளியான நிலையில் 7கிராமங்கள் பேரூராட்சியாக இணைப்பதை தவிர்த்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார்பாளையம், ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜனவரி 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், வேப்பந்தட்டை வட்டத்தை பேரூராட்சியாக அறிவிக்கபட உள்ளதாக தகவல் வந்த நிலையில், அதில் அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட , அன்னமங்கலம் , அரசலூர், விஷ்வகுடி, முகமது பட்டினம், பிள்ளையார்பாளையம், பூம்புகார், ஈச்சங்காடு, ஆகிய ஏழு கிராமங்களையும், பேரூராட்சியுடன், இணைத்தால் தங்களுக்கு வரி உயர்வு ஏற்படும், 100 நாள் வேலை கிடைக்காது, ஆகவே கிராம ஊராட்சிக்கு உண்டான சலுகைகள் கிடைக்காது கூலி விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே தங்களுக்கு விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார்பாளையம் ஆகிய மூன்று கிராமத்தையும் தனியாக பிரித்து தனி ஊராட்சியாக அறிவித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

Tags

Next Story