தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஒன்றியம், காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி, சங்கீதா மற்றும் விமலா ஆகியோர் தங்கள் கிராம மக்கள் சார்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது, தாளநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த காவேரிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 27 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராமலும், வீட்டில் இருந்தபடியே இணைய வழி வாயிலாக வருகையை முறைகேடாக பதிவு செய்தும் அப்படியே பள்ளிக்கு வந்தாலும் அடிக்கடி வெளியே சென்று வந்தும், நீண்ட நேரமாக வகுப்பறைக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக்கொண்டும் காலம் கடத்துகிறார்.

மேலும் மாணவர்களை ஒருமையில் பேசி வருகிறார். எனவே மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி மேலாண்மை குழு நடத்தும் கூட்டங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றும் போது அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் ரிஜிஸ்டர் களையும் தர மறுத்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களையும் உதாசீனமாக பேசி பள்ளி மாணவர்களின் மேம்பாடு குறித்த பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story