மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்!

மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.


வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரண்டனர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் தமிழக அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், வீட்டுமனை பட்டா, சாதிச் சான்றிதழ், நலவாரிய அட்டை, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

கறவை மாடுகள் வழங்க வேண்டும். மகிமண்டலம் பகுதி மக்களுக்கு சுடுகாடு பாதை உள்ளிட்ட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதை மனுக்களாக எழுதி வந்திருந்தனர். அந்த மனுக்களை அவர்கள் கையில் ஏந்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். அவர்களில் சிலர் மட்டும் போலீசார், மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அங்கு அவர்கள் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளித்தனர்.

Tags

Next Story