மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

 நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மாநில அளவிலான கபடிப்போட்டியில் வென்ற பதக்கங்களை காட்டி மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 448 மனுக்கள் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 448 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், ஜேஜே கல்லூரியில் நடைபெற்ற 3-வது மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான கபடி போட்டிகளில், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி கபடி மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றதை அடுத்து, வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் பரிசுகள் மற்றும் வெள்ளி பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story