மோடி ஆட்சியில் 108 முறை பெட்ரோல், டீசல் விலையேற்றம் - திருச்சி சிவா
மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து பாபநாசத்தில் திருச்சி சிவா எம் பி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. பாஜக ஆட்சியில் நமது தனித்தன்மையை சிதைக்கின்ற நிகழ்ச்சியில் ஈடுபட்டது. நாம் வேற்றுமையில் ஒற்றுமையை காண்கிறோம் இந்தியாவின் பரந்த மனப்பான்மைக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் உங்களுக்காக பாராளுமன்றத்தில் போராடினோம் ஜிஎஸ்டி யால் தமிழகத்திற்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது .
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் 108 முறை பெட்ரோல் டீசல் சமையல் எரிவாய் விலை ஏற்றப்பட்டுள்ளது . மூன்று ஆண்டுகளில் இதன் மூலம் மட்டும் ரூ.7.45 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்தது. முதலாளிகளின் கடன் தள்ளுபடி செய்ய அந்த பணம் பயன்பட்டது மோடி அரசு மக்களின் பையில் இருந்து பணத்தை பறிக்கிறது நீங்கள் போடும் வாக்கு எல்லாரும் ஒன்று என்று வாழவைக்கும் நல்லதோர் ஆட்சியை நாங்கள் தருவோம் படு பாதக சட்டங்கள் திரும்பப் பெறப்படும்.உங்கள் வாக்கு எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் நாடு நலமாக இருக்க ஜனநாயகம் நிலைத்திருக்க நீங்கள் எடுக்கும் முடிவில் உள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் எம்பி மற்றும் திமுக நிர்வாகிகள் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்