நெய்வேலி அருகே பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குதல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
Next Story